சென்னை: தமிழகத்தில் 6ம் தேதி கண்டெய்னர் லாரி மற்றும் மற்ற லாரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைமுக கண்டெய்னர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலவரையற்ற வேலை நிறுத்தம் என மோட்டார் சங்கம் ஒருங்கிணைப்பு குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 6ல் உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் என அறிவித்திருந்த நிலையில் மற்றொரு சங்கம் இல்லை என அறிவித்துள்ளது. ஆன்லைன் முறையில் வழக்குப்பதிவதை கண்டித்து வேலை நிறுத்தம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.