சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018 அக்டோபர் முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி பதவி வகித்து வருகிறார். இவர் தலைமையில் மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களில் வெற்றிபெற்றது. கடந்த 25 ஆண்டுகளில் யாரும் இப்பதவியில் நான்கரை ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது கிடையாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கே.எஸ்.அழகிரியையும் மாற்ற வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து, டெல்லி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், 5 ஆண்டுகாலம் பதவியில் உள்ள கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு இன்று மாலை அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. மாநில தலைவர் மாற்றம் தொடர்பாக கடந்த ஜூன் மாதமே டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் செல்வப்பெருந்தகை?:
தேர்தல் நெருங்குவதால் கட்சி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழ்நாடு காங். தலைவர் மாற்றம்? செய்யப்பட உள்ளார். செல்வப்பெருந்தகை தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு என காங்கிரஸ் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. செல்வப்பெருந்தகைக்கு பதில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.