Wednesday, April 17, 2024
Home » தமிழகத்தில் போட்டியிட்டால் தோல்வி உறுதி என்பதால் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுவையில் போட்டி? பாதுகாப்பான தொகுதி என உளவுத்துறை அறிக்கை

தமிழகத்தில் போட்டியிட்டால் தோல்வி உறுதி என்பதால் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுவையில் போட்டி? பாதுகாப்பான தொகுதி என உளவுத்துறை அறிக்கை

by Karthik Yash

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த முறை கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைப் போல, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் மாநிலங்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் முக்கியமான இரு இலாகாவை கவனிக்கும் அமைச்சர்கள் மாநிலங்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சராக இருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதுவும் ஒன்றிய நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், மாநிலங்களவையை மதிப்பதில்லை, முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனால், அவர் மக்களை சந்திக்காமல், பின்புறமாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து அதிகாரம் செய்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் இந்த முறை அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். மேலிடமும் அவருக்கு பாதுகாப்பான தொகுதியை தேடியது. அவர்தான், திருச்சி ரங்கத்தில் பிறந்தேன் என்று அடிக்கடி கூறுவார். நானும் தமிழர்தான் என்பார். இதனால் அவர் தமிழகத்தில் போட்டியிட தயாரா அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இரு நாட்களுக்கு முன்னர் சவால் விட்டார். அதோடு அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜவை அதிமுக கழட்டி விட்டு விட்டது. இதனால் தமிழகத்தில் போட்டியிட்டால் எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல டெபாசிட் கூட கிடைக்காது என்பதால், புதுவையில் போட்டியிடலாமா என்று ஆய்வு நடத்தினர். புதுவையில் பாஜ, என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதனால், அங்கு போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்று கணக்குப் போட்டுள்ளனர். இதற்காக ஒன்றிய உளவுத்துறையினர் ஆய்வு நடத்தினர். பின்னர், மேலிடமும் புதுவையில் போட்டியிட வலியுறுத்தியது. இதனால், புதுவையில் தங்குவதற்கு வசதியாக வீடு பார்க்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வீடு பார்த்தவுடன் ஓரிரு நாளில் புதுவைக்கு வந்து ஆலோசனை நடத்த உள்ளார் என்று புதுவை பாஜவினர் தெரிவிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

2 + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi