சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 8 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் மாஞ்சோலை, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. குமரி மாவட்டம் களியல், திருப்பூர், நெல்லை மாவட்டம் நாலுமுக்கில் தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.