Friday, February 23, 2024
Home » தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

by Porselvi

சென்னை : 2024ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி அவர்களுக்கும் 2023ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை திரு. பரமசிவம் அவர்களுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது திரு. உ. பலராமன் அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதி அவர்களுக்கும் பாவேந்தர் பாரதிதாசன் விருது எழுச்சிக் கவிஞர் முத்தரசு அவர்களுக்கும் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது திரு. ஜெயசீல ஸ்டீபன் அவர்களுக்கும் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் இரா. கருணாநிதி அவர்களுக்கும் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்குத் தமிழால் விளங்கிடும் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புக்களையும் அளித்து, அவர்தம் தமிழ்த்தொண்டுக்குப் பெருமை சேர்த்து வருகிறது.அவ்வகையில், பள்ளி மாணவர்களுக்கு 1983ஆம் ஆண்டிலிருந்து திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவச் செல்வங்களுக்கு விழா எடுத்து ரூபாய் 3 லட்சம் பரிசு வழங்கியும் உலகத் திருக்குறள் மாநாடு மாநில அளவில் இரு முறை நடத்தி தமிழ்த் தொண்டாற்றி வரும் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு 2024ம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் முதன்மைத் தொண்டர் 61601 பாராட்டப்பட்டவரும் 18 வயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவருமான திரு. பத்தமடை பரமசிவம் அவர்களுக்கு 2023ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா வழங்குகிறது.தேசியத் தமிழ்க் கவிஞர் பேராயம், சிலப்புச் செல்வர் ம.பொ.சி அவர்களைக் கொண்டு இளங்கோ இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகளைத் தொடங்கியவரும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. உ. பலராமன் அவர்களுக்கு 2023ம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருதினை வழங்குகிறது.

மேலும், தமிழ்நாடு அரசின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் கேரள மாநில அரசின் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெறும் அளவிற்கு கவிதைகளைப் படைத்த கவிஞர் பழனி பாரதி அவர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருதினை வழங்குகிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் முத்தரசனாரின் “கற்கண்டு கவிதை கேட்டு கழிப்பேறுவகை கொண்டேன்” என்று பாராட்டைப் பெற்றவரும் தமது 92ஆவது அகவையிலும் தனித்தமிழ் வேட்கை அகலாமல் அருந்தமிழ்ப்பணியாற்றி வரும் எழுச்சிக் கவிஞர் ம. முத்தரசு அவர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருதினை வழங்குகிறது.

பல்வேறு நாடுகளின் ஆவணக் காப்பகங்களில் தகவல்களைத் திரட்டி வரலாற்று நூல்களை எழுதியவரும் சோழமண்டல கடற்கரையை முழுமையாக ஆய்வு செய்தவருமான பேராசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபன் அவர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதினை வழங்குகிறது.தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் எளிமையாக கற்கும் வகையில் பாடல்களாக யாத்தளித்த முனைவர் இரா. கருணாநிதி அவர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை வழங்குகிறதுவிருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள். இவ்விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் வழங்கப்படவுள்ளன,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. .

You may also like

Leave a Comment

20 − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi