Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

தமிழக பாஜ நிர்வாகிகளுடன் சென்னையில் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை: கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல உத்தரவு, அண்ணாமலை புறக்கணிப்பு

சென்னை: தமிழக பாஜ நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா சென்னையில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்ேபாது கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சென்னை வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த அவருக்கு தமிழக பாஜ சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக பாஜ மாநில மையக்குழு கூட்டம் காட்டாங்கொளத்தூரில் நடந்தது. கூட்டத்திற்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பாஜ மாநில மேலிட இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் பி.செல்வம் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகள், பூத் கமிட்டி மற்றும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிமுக-பாஜ கூட்டணி உருவானதை தொடர்ந்து கூட்டணியை விரிவாக்கம் செய்து பலப்படுத்துதல், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பாஜவினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது தொடர்பாகவும் பல்வேறு அறிவுரைகளை ஜே.பி.நட்டா வழங்கினார். ஜே.பி.நட்டாவின் வருகையை முன்னிட்டு பாஜ முக்கிய நிர்வாகிகள் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என தமிழக பாஜ தலைமை அறிவுறுத்தி இருந்தது. ஆனால் இந்த கூட்டத்தில் பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. புறக்கணித்து விட்டார். இது பாஜ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.