சென்னை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி, நெல்லை, தேனி, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ஈரோடு, மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நவ.8,9-ல் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
தமிழ்நாட்டில் நவ.8,9-ம் தேதிகளில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு:
சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை முதல் நவம்பர் 11ம் தேதி வரை மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.