சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில் ஓர் உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிப்போருக்கான தமிழ்நாட்டை சார்ந்த நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களின் இறுதி வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு இன்று வெளியிடப்படுகிறது. இந்த வாக்காளர் பட்டியல், சென்னை, சேப்பாக்கத்தில் தேர்தல் அதிகாரியும், ஆணையரும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் அலுவலகத்தில் வெளியிடப்படும். அனைத்து மண்டல வக்பு கண்காணிப்பாளர்களின் அலுவலகங்கள் (11 மண்டலங்கள்) மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் வெளியிடப்படுகிறது.
தேர்தல் நடத்துவதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். தேர்தல் பற்றிய அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் தேர்தல் அதிகாரியால் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.