சென்னை: தமிழ்நாடு முழுவதும் பெண் போலீசாரை பணியில் அமர்த்துவது தொடர்பாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியில் அமர்த்த கூடாது. எஸ்பிக்களில் இருந்து ஐஜி வரையிலான காவல் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு அளித்துள்ளார். பாலியல் புகாரில் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சூழலில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
புகார் அளித்த பெண் காவலர்களில் ஒருவர் மகேஷ் குமாரின் அலுவலகத்தில் பணியில் இருந்துள்ளார். விசாக கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் மகேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல் அதிகாரிகள், அலுவலகம், முகாம் அலுவலகத்தில் பணியில் உள்ள பெண் போலீசாரை உடனே வேறு பணிக்கு மாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொந்தரவு அளித்ததாக மகேஷ்குமார் மீது டிஜிபி சங்கர் ஜிவாலிடம் பெண் காவலர் அளித்த புகார் குறித்து, விசாகா கமிட்டி விசாரணை நடத்திய நிலையில், விசாக கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் மகேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பெண் காவலர்களின் பாதுகாப்பு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி. முதல் ஐ.ஜி. வரையிலான காவல் அதிகாரிகள் அலுவலகம், முகாம் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது. காவல் அதிகாரிகள், அலுவலகம், முகாம் அலுவலகத்தில் பணியில் உள்ள பெண் போலீசாரை உடனே வேறு பணிக்கு மாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.