சென்னை: தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்கு சிறகு விரிக்கிறேன் என்று சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்து வருகிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சியே அமெரிக்கா பயணத்தின் நோக்கம். முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணங்களை நான் மேற்கொண்டு வருகிறேன். ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், ஸ்பெயின் நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏற்கனவே சென்றேன். 3 ஆண்டுகளில் ரூ.9.99 லட்சம் கோடி மதிப்பில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 18.89 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். 2030-க்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைய பயணம் மேற்கொள்கிறேன்