Thursday, April 18, 2024
Home » ஓயாம தமிழகம் வர்றீங்களே மோடி… எதை சொல்லி இங்க ஓட்டு கேப்பீங்க?… சமூகவலை தளங்களில் டிரெண்டிங்

ஓயாம தமிழகம் வர்றீங்களே மோடி… எதை சொல்லி இங்க ஓட்டு கேப்பீங்க?… சமூகவலை தளங்களில் டிரெண்டிங்

by MuthuKumar

நாளுமன்றத்துக்கு இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி தமிழகத்தில் ஒன்றிய அரசு சார்பில் ஏதாவது திட்டங்கள் தொடங்கி வைப்பதாக கூறி அடிக்கடி தமிழகம் வருகிறார். அரசு திட்டங்கள் தொடங்கி வைத்துவிட்டு, அன்று பாஜ பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதேபோன்று நேற்றும் சென்னை அடுத்துள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி, மாலையில் சென்னை நந்தனத்தில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பேசினார். பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவதையொட்டி சமூகவலைதளங்களில் கடும் விமர்சனங்கள் தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. அதற்கு வாயாலே சுடும் வடை என்று பெயரிட்டுள்ளனர்.

சமூகவலைதளத்தில் நேற்று ஜெயா என்பவரின் பதிவு: கடைசி இரண்டு மாதத்தில் பிரதமர் மோடி 4வது முறையாக தமிழ்நாட்டிற்கு வருகிறார். இங்க வந்து மோடி என்ன சொல்லி ஓட்டு கேட்பாரு? ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு தந்துவிட்டேன் என்று சொல்லி ஓட்டு கேட்பாரா? கருப்பு பணத்தை ஒழித்துவிட்டேன் என்று சொல்லி ஓட்டு கேட்பாரா? வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தையெல்லாம் எடுத்துட்டு வந்து மக்களுக்கு ₹15 லட்சம் போட்டுட்டேன் என்று சொல்லி ஓட்டு கேட்பாரா? வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்துட்டேன், விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக ஆக்கிட்டேன்னு சொல்லி ஓட்டு கேட்பாரா? தமிழக விவசாயிகளின் பாசன நீர் பிரச்னையை தீர்த்துட்டேன் என்று கூறி ஓட்டு கேட்பாரா? ராமேஸ்வரத்தை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றிவிட்டேன் என்று சொல்லி ஓட்டு கேட்பாரா? மதுரைக்கு எய்ம்ஸ் கொண்டு வந்துட்டேன் என்று சொல்லி ஓட்டு கேட்பாரா? இல்ல…

சென்னை பெருவெள்ளத்துக்கு நிவாரணம் கொடுத்துட்டேன்னு சொல்லி ஓட்டு கேட்பாரா? தென்தமிழக மழை வெள்ளத்துக்கு நிவாரணம் கொடுத்துட்டேன்னு சொல்லி ஓட்டு கேட்பாரா? தான் சொன்ன வாக்குறுதியெல்லாம் 10 வருஷமாக நிறைவேற்றாத ஒருத்தர், தமிழ்நாட்டுக்கு வந்து எந்த முகத்தை வைத்துகொண்டு ஓட்டு கேட்பாரு? ஒண்ணுமே புரியவில்லையே…!!!

இதேபோல் ஏஞ்சல் ராஜகுமாரி என்பவரின் பதிவு: ஒரு கிலோ மீட்டர் ரோடு போடுவதற்கு ₹250 கோடி செலவாகும்ன்னா, நீங்க நம்புவீங்களா? ஊழலை ஒழிப்போம் என்று ெசால்லி இங்க உட்கார்ந்திருக்கும் ஒன்றிய பாஜ அரசு டெல்லி – அரியானா எக்ஸ்பிரஸ் ஹைவேக்கு ஒரு கிலோ மீட்டர் ரோடு போடுவதற்கு ₹18 கோடி நிர்ணயம் பண்ணினார்கள். ஆனால் செலவு செய்தது, ₹250 கோடி…!!!

ஜெயச்சந்திரன்: “நான் (தமிழக அரசு) கேட்டது, தமிழகத்தில் ஏற்பட்ட இரண்டு பெருவெள்ளத்துக்கான நிதி ₹37 ஆயிரம் கோடி. ஆனா, அவரு (பிரதமர் மோடி) எனக்கு (தமிழகத்துக்கு) கொடுத்தது…” என்று கூறி மோடி 10 ஆண்டுகளில் சுட்ட வடை என்ற தலைப்பில் பிரதமர் மோடி உடல்களில் உள்ள வடைகளை காண்பிக்கும் படத்துடன் முடித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

20 − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi