டெல்லி : தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் பாஸ்கர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு 2007-ல் தமிழ்நாடு அரசு வழங்கிய 5% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. 5% இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.