Friday, March 1, 2024
Home » இந்தியாவிலேயே முதல் முறையாக மொழி தொழில்நுட்பத்திற்கான மாநாட்டை நடத்துவது தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

இந்தியாவிலேயே முதல் முறையாக மொழி தொழில்நுட்பத்திற்கான மாநாட்டை நடத்துவது தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

by Francis

சென்னை: செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்துக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழ்நாடு அரசுதான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்” என பன்னாட்டு கணித்தமிழ் மாநாட்டு நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வரின் வாழ்த்து செய்தியை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பன்னாட்டு கணித்தமிழ் 24 மாநாட்டில் வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது: பன்னாட்டு கணித்தமிழ் – 24 என்கிற மாநாடு தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் பிப்ரவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. திமுக ஆட்சியில், கடந்த 1997ம் ஆண்டே தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வகுத்துக் கொடுத்தார் அன்றைய முதல்வர் கலைஞர். கணினி என்ற பெயர் தமிழ்நாட்டிலுள்ள மக்கள் எல்லோரையும் சென்றடைவதற்கு முன்னதாகவே, டைடல் பூங்காவைத் தமிழ்நாட்டில் அமைத்தவர் கலைஞர். அதே வழியில்தான் எனது தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசும் செயல்பட்டு வருகிறது.

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்துக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழ்நாடு அரசுதான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். கலைஞரால் உருவாக்கப்பட்ட தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆற்றிவரும் தொண்டு என்பது எதிர்காலத் தமிழ்த் தொண்டாகும். இதற்குக் காரணமான தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பாராட்டுகிறேன். தமிழ்நாடு அரசின் அழைப்பை ஏற்று உலகம் முழுவதும் இருந்து வருகை தந்துள்ள தகவல் தொழில்நுட்ப அறிஞர்கள், வல்லுநர்கள் அனைவர்க்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். செயற்கை நுண்ணறிவுப் பாதையில் தமிழ்மொழியை வெற்றிகரமாகப் பயணிக்க வைக்க வேண்டும். தொழில்நுட்பங்களுக்கு ஏற்பத் தமிழ்மொழி, தகவமைக்கப்பட வேண்டும்.

 

You may also like

Leave a Comment

eighteen − eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi