சென்னை: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ரமலான் நோன்புக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ₹19 கோடி மதிப்பீட்டில் சுமார் 8 மெட்ரிக் டன் பச்சரிசி அனைத்து மசூதிகளிலும் நோன்பு கஞ்சி தயாரிக்க அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டில் ஹஜ் ஹவுஸ் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு இடம் பரிந்துரை செய்து வருகிறது. சென்னை புதிய விமான நிலையத்திற்கும், பழைய விமான நிலையத்திற்கும் நடுவில் அமைய இருக்கும் இந்த ஹஜ் ஹவுஸ் இஸ்லாமியர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.
2025 ஹஜ் பயணம் மேற்கொள்வோர் அனைவருக்கும் மானியத் தொகையாக தலா ₹25 ஆயிரம் வழங்கிட முன் வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தடுத்து பல்வேறு நலத்திட்டங்களை இஸ்லாமியர்களுக்கு அளித்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒட்டுமொத்த இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை, வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.