கடலூர்: கடலூர் மாவட்டத்திற்கு ரூ.80 கோடி மதிப்பில் 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கவும் ரூ.23.93 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அரசு துறைகளின் ஆய்வு கூட்டம் மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடலூரில் ஆயிரக்கணக்கானோர் சாலையில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.