சென்னை: தமிழகத்தில் 6-12ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுக்கான பொதுவினாத்தாள் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வினாத்தாளை வடிவமைத்து காலாண்டு தேர்வுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் 12 மாவட்டங்களில் பொது வினாத்தாள் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறனை மேலும்அதிகரிக்கும் வகையில் பொதுவினாத்தாள் முறை அறிமுகம் செய்யப்படுகிறது. வழக்கமாக ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தால் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.