சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமனம் செய்துள்ளனர். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாகு ஐ.ஏ.எஸ் கால்நடைத்துறை செயலாளராக மாற்றம் செய்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார் அர்ச்சனா பட்நாயக். தற்போது இவர் MSME துறையின் செயலாளராக உள்ளார்