சென்னை: தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று அதிகாலை, சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் வழியாக லண்டன் புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று அதிகாலை 4 மணிக்கு, சென்னை விமான நிலையத்திலிருந்து, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் வழியாக லண்டன் புறப்பட்டு சென்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிப்பதற்காக அவர் லண்டன் சென்றுள்ளார். இதற்காக, 4 மாதங்கள் லண்டனில் தங்கி இருப்பார்.
அண்ணாமலை 4 மாதங்கள் படிப்பை முடித்துவிட்டு, டிசம்பர் மாத இறுதிக்குள் சென்னைக்கு திரும்புவார் என்று, பாஜ கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.லண்டன் செல்வதற்காக நேற்று அதிகாலை 2.30 மணி அளவில், சென்னை சர்வதேச விமானநிலையம் வந்த அண்ணாமலைக்கு தமிழக பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வழியனுப்பி வைத்தனர்.