தஞ்சை: 2 மாதத்தில் தமிழ்நாட்டில் 36,000 ரேசன் கடைகளில் கருவிழி மூலம் அடையாளம் காணும் ஐ ரைஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளது. நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு பொட்டலங்கள் மூலம் உணவு பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 4 லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை சேமிக்க ரூ.400 கோடி நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்