சென்னை: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். நாமக்கல், சேலம், தர்மபுரி, கரூர், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டத்திலும் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.