Saturday, April 13, 2024
Home » தமிழிசை ராஜினாமா அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதைதான்: முத்தரசன் கிண்டல்

தமிழிசை ராஜினாமா அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதைதான்: முத்தரசன் கிண்டல்

by Karthik Yash

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜ தலைமையிலான அணி மகா சந்தர்ப்பவாத அணி. ராமதாஸ், அன்புமணி இருவரும் மிரட்டலால் பாஜவில் ஐக்கியமாகி உள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் இக்கூட்டணியை நிராகரிப்பார்கள். அதிமுக அனைத்து கதவுகள், ஜன்னல்களையும் திறந்து வைத்து யாராவது வருவார்கள் என எதிர்பார்த்தது. ஆனால் கடந்த காலத்தில் எடப்பாடி பழனிசாமி நடந்து கொண்ட முறையால் யாரும் சேரவில்லை. தமிழிசை சவுந்தராஜன் ராஜினாமா செய்தது, அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதை. கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஒரு கருத்தை திணிக்க முயற்சி செய்கின்றனர். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகி விடும் என நினைக்கின்றனர். ஒன்றிய அமைச்சர் பெங்களூரு குண்டு வெடிப்புக்கு தமிழர்கள் தான் காரணம் என கூறியதற்கு அவர் ராஜினாமா செய்ய வேண்டும். மோடி முதல் ஒன்றிய அமைச்சர்கள் வரை யாரும் பொறுப்பாக பேசுவது கிடையாது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். பிரதமர் அநாகரீகமாக மேடைகளில் பேசுகிறார். எந்த அரசியல் நாகரீகத்தையும் அவரிடம் எதிர்பார்க்க முடியவில்லை. இவ்வாறு கூறினார்.

You may also like

Leave a Comment

10 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi