புதுடெல்லி: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது செம்மொழியான தமிழின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். குறிப்பாக டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான புதிய துறையை உருவாக்க வேண்டும்.
அதே போன்று அதற்கான ஆராய்ச்சி மையத்தையும் ஏற்படுத்த வேண்டும். அதே போன்று தமிழ் மொழி மற்றும் இலக்கியம் போன்ற தொன்மையான மற்றும் செம்மொழிகளை நாடு முழுவதும் மாணவர்கள் படிக்கும் வகையில் பிற
கல்லூரிகள் மற்றும் துறைகளிலும் அதற்கான புதிய பதவிகளையும் உருவாக்கி தர வேண்டும் என்று துணை ஜனாதிபதியிடம், அமைச்சர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.