சென்னை : தமிழுக்கு சுண்ணாம்பு, சமஸ்கிருதத்திற்கு வெண்ணெய் என ஒன்றிய கல்வி அமைச்சகத்துக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.“வேத் வித்யாவை” ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மகரிஷி சாந்திபனி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஷ்டானின் (வேத சமஸ்கிருத வாரியம்) 5 பிராந்திய மையங்களை ஒன்றிய அரசு விரைவில் அமைக்கும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி, பத்ரிநாத், துவாரகா, ஜெகநாத், ராமேஸ்வரம் மற்றும் குவாஹாட்டில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்க பதிவில், “செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேஸ்வரத்தில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, தமிழுக்குச் சுண்ணாம்பு, சமஸ்கிருதத்திற்கு வெண்ணெய்”, என்று பதிவிட்டுள்ளார்.