Tuesday, April 23, 2024
Home » சாதனை பாதையில் தமிழ்நாடு அரசு.. ஆளுநரின் செயல்பாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சாதனை பாதையில் தமிழ்நாடு அரசு.. ஆளுநரின் செயல்பாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

by Neethimaan
Published: Last Updated on

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர்; நாட்டின் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை அடைய பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்தளித்த வழித்தடமே காரணம். திராவிட மாடல் கொள்கைகளில் பயணிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை, தடுக்கவும் முடியாது. வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என நாமே முழங்கினோம்; இன்று தெற்கு வளர்கிறது; வடக்குக்கும் சேர்த்து வாரி வழங்குகிறது.

இன்று தெற்கு வளர்கிறது, வடக்குக்கும் சேர்த்து வாரி, வழங்குகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்பதை அரசியல் களத்தில் விதைத்தார் தந்தை பெரியார். பெரியாரின் கொள்கைகளை ஆட்சி, அதிகாரத்தில் இருந்து செயல்படுத்தினார்கள் அண்ணாவும், கலைஞரும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்தார். அரசு தயாரிக்கும் உரையை அப்படியே வாசிப்பது ஆளுநரின் கடமை. ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைக்கு சட்டமன்றத்தை பயன்படுத்திக் கொண்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்தும் அவமானப்படுத்தும் செயல்.

அரசியலமைப்புச் சட்ட பதவியில் இருக்கிறார் என்பதற்காக அதனை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதுபோன் எத்தனையோ தடைகளை உடைத்து எழுந்து வந்தவர்கள் நாம். ஆளுநர் அரசியலமைப்புச் சட்டப்படி பதவியேற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறி செயல்பட்டுள்ளார். பாசிசத்தை எதேச்சதிகாரத்தை எதிர்த்து நிற்கும் நாம் இதுபோன்று சிறுபிள்ளைத்தனமான செயலை கண்டு அஞ்சமாட்டோம். முதலமைச்சராக நான் பதவியேற்று 33 மாதங்கள் ஆகின்றன; இது முன்னேற்றத்துக்கான காலம். இந்திய பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கை தருகிறது தமிழ்நாடு பொருளாதார வளம்.

இந்தியாவின் பணவீக்கம் 6.6 சதவீதமாக உள்ளது தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.9 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியா வளர்ச்சி 7.2%ஆக இருக்கும்போது தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19%ஆக உள்ளது. கல்வியை 2-வது இடத்துக்கு உயர்த்தி இருக்கிறது திமுக அரசு. புத்தாக்க வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அனைத்து தரப்பினரின் வாழ்க்கை தரமும் உயர்ந்து இருப்பதுதான் திமுக ஆட்சியின் 10-வது சாதனை. பல்வேறு மாநிலங்கள் தமிழ்நாட்டின் திட்டங்களை பார்த்து சென்று அவர்கள் மாநிலங்களில் செயல்படுத்துவதுதான் வரலாற்று சாதனை. திமுக அரசின் சாதனைகளை நாள் முழுவதும் பட்டியலிட முடியும்.

தமிழ்நாடு வளர்ந்து வருவதை பார்த்து நம் இன எதிரிகளுக்கு கோபம் வருகிறது அல்லவா அதுதான் மிகப்பெரிய சாதனை. நம் இன எதிரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கோபத்தை காட்டுகிறார்கள். கோபத்தை வெளிப்படுத்துவதில் அரசியலமைப்புச் சட்ட பதவியில் இருக்கும் ஆளுநரும் விதிவிலக்கு அல்ல அரசியலமைப்புச் சட்ட பதவியில் இருக்கிறார் என்பதற்காக அதனை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 1.15 கோடி பெண்கள் பெற்று வருகிறார்கள். மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்களால் பெண்களின் பொருளாதாரம் உயர்கிறது.

தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்த ஆட்சி நடைபெற்று வருவதற்கான அடையாளங்களாக திமுக அரசின் பல்வேறு சாதனைகள் உள்ளன. பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல சமூக முன்னேற்றத்தையும் சேர்த்து கொடுத்து வருகிறோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற தடத்தில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது இவ்வாறு கூறினார்.

 

You may also like

Leave a Comment

seven + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi