சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது சொந்த பயணமாக, கடந்த 17ம் தேதி பெங்களூரு சென்றார். பின்னர் அங்கிருந்து ஐதராபாத் சென்று நேற்று முன்தினம் மாலை சென்னை திரும்பி வந்தார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.ன்.ரவி நேற்று காலை 2 நாள் பயணமாக திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். ஆளுநரின் திடீர் டெல்லி பயணத்துக்கு என்ன காரணம் என்று கவர்னர் மாளிகை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவிக்கப்படவில்லை. ஆனால், அவருடைய சொந்த பயணம் என்று வழக்கமானதுதான் என்று மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. அதோடு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம், நீட் தேர்வு எதிர்ப்பு மசோதா, சனதானத்துக்கு ஆதரவாக செயல்படுவது, நீண்ட காலம் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதில், தமிழ்நாடு அரசுடன் கருத்து வேறுபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இந்நிலையில் ஆளுநர் ரவி திடீரென்று டெல்லி சென்றிருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.