சென்னை: தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறித்த கணிப்பை பொருளியியல் புள்ளியியல் துறை தயாரித்துள்ளது என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் எப்படி வளர்ந்துள்ளது என்பது குறித்து புள்ளி விவர அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு நிலைத்த விலையில் ரூ.20.71 லட்சம் கோடியாக உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.