சென்னை: தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணை: தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளர் கீதா புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலராகவும், பரந்தூர் நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலராகவும்,
தலைமைச் செயலக தனி அலுவலர் ராமபிரதீபன் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராகவும், இந்து சமய அறநிலையங்கள் துறை கோயில் நிலங்கள் தனி அலுவலர் ஜானகி சென்னை மாவட்ட வருவாய் அலுவலராகவும், சிப்காட் பொது மேலாளர் கார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும், திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி பரந்தூர் நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல பொதுத்தேர்தல்கள் துறை இணை தலைமை தேர்தல் அலுவலர் அரவிந்தன் முதலமைச்சரின் தனிப்பிரிவு தனி அலுவலராகவும், தஞ்சாவூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ஸ்ரீமோகனா இந்து சமய அறநிலையங்கள் துறை கோயில் நிலங்கள் தனி அலுவலராகவும், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் அனுசுயாதேவி வருவாய் நிர்வாக ஆணையரகம் திட்டங்கள் துணை ஆணையர் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்ட துணை ஆணையராகவும், திருபெரும்புதூர் சிப்காட் பகுதி 1, நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் காளிதாஸ் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயலாளராகவும், சென்னை புறவட்ட சாலை நிலம் எடுப்பு தனி அலுவலர் லீலா அலெக்ஸ் சிப்காட் பொது மேலாளராக மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் சென்னை அரசு விருந்தினர் இல்லம் இணை மாநில மரபு அலுவலராகவும், ஆவின் பொது மேலாளர் ஆலின் சுனோஜா தமிழ்நாடு வக்பு தீர்ப்பாயம் உறுப்பினராகவும், பரந்தூர் டிட்கோ நில எடுப்பு தனி அலுவலர் பேபி இந்திரா திருவள்ளூர் நெடுஞ்சாலை திட்டங்கள் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும், தமிழ்நாடு வக்பு தீர்ப்பாயம் உறுப்பினர் குமாரவேல் விழுப்புரம் நெடுஞ்சாலை திட்டங்கள் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.