சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை-2024 விளையாட்டு போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு 4.8.2024 முதல் https:/sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. முன்பதிவிற்கான கடைசி நாள் 25.8.2024 (இன்று) என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை முன்பதிவில் கிடைக்கப்பெற்ற அமோக வரவேற்பை தொடர்ந்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் அனைத்து தரப்பு மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் இணையதள முன்பதிவு செய்திட கால அவகாசம் 2.9.2024 தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
‘ஆடுகளம்’ தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.