சென்னை: தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்குச் சிறகு விரிக்கிறேன்; உங்கள் வாழ்த்துக்ளுடன் பறக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று தொடங்கி செப்டம்பர் 14-ம் தேதி வரை அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான். அமெரிக்க வாழ் தமிழர்களை சந்திப்பது எனக்கும் அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியாக அமையும். தமிழ்நாடு பயன் பெறுவதற்கான பயணங்களில் ஒன்றாக அமெரிக்காவுக்குப் பயணிக்கிறேன்,. குறுகிய இடைவெளியில் தமிழ்நாடு அரசின் நிர்வாக பணிகள் தொய்வின்றி தொடர அமைச்சர்கள், அதிகாரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.