சென்னை; தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் பற்றி எனக்கு தகவல் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் செயல்பாட்டு மையத்தை முதலமைச்சர் திறந்துவைத்தார். ரூ.5.12 கோடி செலவில் 10,000 சதுர அடி பரப்பில் அவசரகால செயல்பாட்டு மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் செயல்படும் வகையில் பேரிடர் முன்னெச்சரிக்கை மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
அவசரகால செயல்பாட்டு மையத்தை திறந்துவைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; தமிழ்நாடு முழுவதும் பேரிடர் கட்டுப்பாட்டு மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவை தமிழ்நாடு அரசு நடத்தியது. அமெரிக்காவில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு உள்ளது. அமெரிக்க பயணத்தை முடித்து திரும்பிய பிறகு அதன் முடிவுகளை கூறுகிறேன். தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கு தகவல் வரவில்லை என்று கூறினார்.