Friday, April 19, 2024
Home » தமிழக பாஜ 2வது பட்டியல் வெளியீடு விருதுநகரில் ராதிகா போட்டி: விளவங்கோடு இடைத்தேர்தல் வேட்பாளராக வி.எஸ்.நந்தினி அறிவிப்பு

தமிழக பாஜ 2வது பட்டியல் வெளியீடு விருதுநகரில் ராதிகா போட்டி: விளவங்கோடு இடைத்தேர்தல் வேட்பாளராக வி.எஸ்.நந்தினி அறிவிப்பு

by Ranjith

சென்னை: தமிழகத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள், தமாகாவுக்கு 3 தொகுதிகள், அமமுகவுக்கு 2 தொகுதிகள், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 4 கட்சிக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த 4 கட்சிகளும் பாஜவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. மீதியுள்ள 19 தொகுதிகளில் பாஜ போட்டியிடுகிறது. முதல்கட்டமாக பாஜவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மீதியுள்ள 14 ெதாகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

அதில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் வி.பாலகணபதி, வடசென்னை-பால் கனகராஜ், திருவண்ணாமலை- அஸ்வத்தாமன், நாமக்கல்-கே.பி.ராமலிங்கம், திருப்பூர்-ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சி-கே.வசந்தராஜன், கரூர் வி.வி.செந்தில்நாதன், சிதம்பரம் (தனி)- பி.கார்த்தியாயினி, நாகப்பட்டினம் (தனி) எஸ்.ஜி.எம்.ரமேஷ், தஞ்சாவூர்-எம்.முருகானந்தம். சிவகங்கை-தேவநாதன் யாதவ், மதுரை-ராம ஸ்ரீநிவாசன், விருதுநகர்-ராதிகா சரத்குமார், தென்காசி (தனி)-ஜான் பாண்டியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

விளவங்கோடு தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வி.எஸ்.நந்தினி போட்டியிடுவார் என்றும் டெல்லி மேலிடம் அறிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி தொகுதியில் ஏ.நமச்சிவாயம் போட்டியிடுவார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஜவில் இணைந்த சரத்குமாரின் மனைவியான ராதிகாவுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

You may also like

Leave a Comment

16 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi