டெல்லி: தமிழக பாஜக மேலிட பொறுப்பாளரை விரைவில் நியமிக்க தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக-பாஜக கருத்து முரண்பாடுகளை அடுத்து மேலிட பொறுப்பாளரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியை சுமூகமாக கொண்டுசெல்ல மேலிட பொறுப்பாளரை நியமிக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.