சென்னை: ஹேமா கமிட்டி போன்று தமிழ் திரையுலகிலும் கமிட்டி அமைக்க வேண்டும் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். திரையுலகில் மட்டுமல்ல; எல்லா துறைகளிலும் பிரச்சனை உள்ளது. கேரவன் விவகாரத்தில் தன்னை தொடர்புகொண்ட கேரள போலீசாரிடம் என்ன நடந்தது என விரிவாக எடுத்துக் கூறினேன். கேரள போலீசாரிடம் புகார் அளிக்கவில்லை; என்ன நடந்தது என்பது குறித்து மட்டும் விளக்கம் அளித்தேன் என கூறினார். கேரள படப்பிடிப்பின்போது கேரவனில் ரகசிய கேமரா இருந்தது என நடிகை ராதிகா கூறியிருந்தார்.