சென்னை: தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.