சென்னை: தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் சேவையை டெல்லியில் இருந்தவாறு காணொளியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. எழும்பூர் – நாகர்கோவில் இடையேயான வந்தேபாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை வழியே இயக்கம். மதுரை – பெங்களூரு ரயில் கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் நிறுத்தங்களில் நின்றுசெல்லும். பிரதமர் இன்று சேவையைத் தொடங்கி வைத்த நிலையில் செப்டம்பர். 2 முதல் ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை காணொளியில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!
previous post