சென்னை: தமிழ்நாடு பாடத்திட்டம் குறித்த ஆளுநர் ரவியின் விமர்சனம் தவறானது என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு பாடத்திட்டம் முறையாக இல்லை. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தரமானதாக இல்லாததன் காரணமாக மற்ற மாநில மாணவர்களோடு தமிழ்நாட்டு மாணவர்கள் போட்டியிட முடியவில்லை என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் கருத்திற்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாடத்திட்டம் அனைத்தும் சிபிஎஸ்சி படத்திட்டத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் மாநில பாடத்திட்டத்தில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை. இங்கு அதனை கற்பிப்பதற்கான கட்டமைப்புகள் உள்ளன.
ஆனால் ஆசிரியர்கள் அதனை முறையாக கற்பிக்க வேண்டும். அந்த சிக்கலை அரசு உடனடியாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே, ஆளுநர் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர். சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பாடத்திட்ட குழுவில் இடம்பெற்றிருந்த கல்வியாளரான பாலகுருசாமி தெரிவித்திருக்கும் கருத்து முக்கியத்துவம் அளித்ததாக கருதப்படுகிறது.