டெல்லி: தமிழ்நாட்டில் ஜூன் 14, 15 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 21 செ.மீ.-க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 13, 16, 17 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும். 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்தது.
தமிழ்நாட்டில் 2 நாட்கள் ரெட் அலர்ட்: இந்திய வானிலை மையம்
0