சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 19ம் தேதி மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19ல் தேர்தல் நடைபெறுகிறது. கூடுதல் செயலாளர் சுப்பிரமணியன் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணியாற்றுவார். வைகோ (மதிமுக), அன்புமணி (பா.ம.க), என்.சந்திரசேகரன் (அதிமுக), வில்சன் (திமுக), எம்.சண்முகம் (திமுக), எம்.எம்.அப்துல்லா (திமுக) பதவிக்காலம் முடிவடைகிறது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூலை 24ல் முடிவடைகிறது.
தமிழ்நாட்டில் ஜூன் 19ம் தேதி மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
0