சென்னை: தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு 1000 ரூபாயை ஒன்றிய அரசு பிச்சையாக போடுவதாக டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு வைத்துள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களை இணைப்பது, இருப்புப் பாதைகள்தான். தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. ரயில்வே திட்டங்களிலும் தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது ஒன்றிய அரசு என தெரிவித்தார்.