விருதுநகர்: ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திமுக ஆட்சியின் சாதனைகள், நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற உள்ளோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில் விருதுநகர் அருப்புக்கோட்டையில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; திமுக ஆட்சியின் சாதனைகள், நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற உள்ளோம். திமுக உறுப்பினர் சேர்க்கை மட்டுமல்ல, தமிழ் மண், மானத்தை காக்கக் கூடிய இயக்கமாக ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் இருக்கும். தமிழ்நாட்டை வன்மத்தோடு பார்ப்பதாக ஒன்றிய பாஜக அரசு மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டியுள்ளார்.
ஓரணியில் தமிழ்நாடு.. திமுக ஆட்சியின் சாதனைகள், நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற உள்ளோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
0
previous post