சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 29, 30 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கடலோரா பகுதிகளில் ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.