சென்னை: ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையை தொடங்கினார். ஆழ்வார்ப்பேட்டையில் தனது வீட்டிற்கு அருகே உள்ள வீடுகளுக்குச் சென்று முதல்வர் ஸ்டாலின் பரப்புரை செய்தார். திமுக அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் எடுத்துக் கூறிவருகிறார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பரப்புரை செய்கின்றனர்.