சென்னை: திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அண்ணா அறிவாலயத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; ஓரணியில் தமிழ்நாடு என்ற மகத்தான முன்னெடுப்பை திமுக சார்பில் தொடங்கி வைத்துள்ளேன். இன்று முதல் 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறுகிறது. நாளை ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஜூலை 3 முதல் தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக சென்று மக்களை சந்திக்க உள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராக உள்ளது, தயாராகி நீண்ட நாட்களாகிவிட்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
0