சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4செ.மீ. மழைப்பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கதேசத்தில் இருந்து 200கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை உருவாகியுள்ளது.