சென்னை: தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை 9000-ஐ தாண்டியுள்ளது என தொழில்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை 9,038 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 7,006 புத்தொழில் நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. 2021ல் 966ஆக இருந்த மகளிர் புத்தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை தற்போது 3 மடங்கு அதிகரித்து 4,446 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.