சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 10 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 20 செ.மீ. மழை பெய்துள்ளது. சின்னக்கல்லாறில் 15 செ.மீ., எமரால்டு, வால்பாறையில் தலா 12 செ.மீ., சோலையாறு, சின்கோனாவில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 4 இடங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 இடங்களில் கனமழை பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்
277