டெல்லி: தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு. நாளை வங்கக்கடல், வங்கதேசம், மேற்கு வங்க பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாயப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்தது.
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
0