மதுரை: தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவை எதிர்த்த மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சிறப்பு சட்டம் ஒன்றை அமல்படுத்தியது. இந்த சட்டம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு பின்பு அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் நோக்கம் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிலம் கையக படுத்துவது குறித்து அரசால் உரிய முடிவு எடுக்க முடியும் என்று அறிவித்திருந்தது.
இந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது தொழிற்சலைகளை அமைப்பதற்கு விவசாய நிலங்களில் எந்த அனுமதியும் இல்லாமல் கையக படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் எனவே இந்த சட்டம் என்பது சட்டவிரோதமானது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் நீதிபதி மரியா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் மனுதாரருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர் குறிப்பாக தமிழக அரசு பாலிசி ரீதியாக ஒரு கொள்கை முடிவெடுத்து சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கு நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யலாம். அவ்வாறு இல்லாமல் பொத்தம் பொதுவாக இந்த வழக்கில் ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செரிபவத்தை ஏற்று கொள்ள முடியாது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எப்படி மக்களுக்கு நிகரான சட்டம் என்று சொல்வீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.