சென்னை: மூத்த நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளார். 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முத்திரை பதித்த டெல்லி கணேஷ், நூற்றாண்டில் மிகச்சிறந்த நடிகர்களுள் ஒருவர். டெல்லி கணேஷ் மறைவு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே பேரிழப்பு. கலைமாமணி டெல்லி கணேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.