சென்னை: தமிழ்நாட்டின் கல்வி முறை சிறப்பாக உள்ளது; சிறந்த தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதிலளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அதில் எங்களின் மாநில கல்விக் கொள்கை மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிகச்சிறந்த முன்னேற்றத்தை பார்த்திருக்கிறோம். புதிய கல்விக் கொள்கை மற்றும் மொழிப் பிரச்சினை குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு மீதான தாக்குதல் என்பது மற்றொரு பெரிய பிரச்சினையை மறைக்கும் செயல். மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக கருத்து அடிப்படையிலான கற்றலில் கவனம் செலுத்துவது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தொழில்முறை துறைகளில் சிறந்து விளங்க தலைமுறை தலைமுறை மாணவர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
“15.2 லட்சம் மாணவர்கள்தான் மும்மொழி படிக்கின்றனர்
1,635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே மும்மொழி படிக்கின்றனர். தமிழ்நாட்டில் 1.09 கோடி மாணவர்கள் 58,779 பள்ளிகளில் மாநில பாடத்திட்ட கல்வியை தேர்வு செய்துள்ளனர். உடைந்ததை ஒட்ட வைக்க நினைக்காதீர்கள்.
அமைச்சர் பிரதானுக்கு அன்பில் மகேஸ் பதிலடி
தமிழ்நாட்டின் கல்வி முறை சிறந்த தொழில்முனைவோர், சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி வருகிறது. தமிழ்நாட்டின் கல்வி முறை சிறப்பாக உள்ளது; தேசிய கல்விக் கொள்கை சீர்குலைக்கிறது. 3வது மொழியை படிக்க அவசியம் இருந்தால் ஏன் இவ்வளவு பேர் மாநில பாடத்திட்டத்தை தேர்வு செய்துள்ளனர்?.
தமிழ்நாட்டின் கல்வி அமைப்பை மாற்றாதீர்
நன்றாக செயல்படும் தமிழ்நாட்டின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம்.
இருமொழிக் கொள்கையையே தமிழ்நாடு விரும்புகிறது
இருமொழிக் கொள்கையையே தமிழ்நாடு விரும்புகிறது. தேசிய கல்விக்கொள்கையில் தமிழ்நாட்டின் நிலைப்பாடை விமர்சிப்பது தவறான வழிநடத்துதலாகும். உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டு பாடத்திட்டம் மிகச்சிறந்த பலனை அளித்துள்ளது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் சோதனை முயற்சியை கடந்து பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.